படிக்கட்டுகளில் கவனம் தேவை

படிக்கட்டுகளில் கவனம் தேவை
Updated on
1 min read

மாடிகள் எப்போதும் நம் நினைவில் தங்கியிருக்கும் இடம். பொதுவாக மரத்தாலான படிக்கட்டுகள் வீட்டின் அழகுக்கு மெருகூட்டும். வெளியில் அமைக்கும் படிக்கட்டுகளை சிமெண்டோ கற்களோ கொண்டு அமைக் கலாம்.

படிக்கட்டுகளின் அமைப்பைப் பொறுத்தவரை உயரத்தைவிட அகலமாக அமைக்க வேண்டும். படிகளின் உயரம் குறைவாகவும், கால் வைக்கும் பகுதி அகலமாகவும் இருக்க வேண்டும். படிக்கட்டுகள் அழகாக இருப்பதைவிட பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்க வேண்டும். குழந்தைகள், முதியோர்கள் எளிதாக ஏறி இறங்க வசதியாக வீதியாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதுபோல படிக்கட்டுகள் எல்லாம் சம அளவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெவ்வேறு அளவுகள் இருக்கும்போது நாமே அடி சறுக்கி விழக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. மாடிப் படிக்கட்டுகள் மீது கார்பெட் விரிக்கும்போது கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கார்பெட்டின் முனைகள் கூர்மையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in