உள் அறைகளுக்கு ஏற்ற பிவிசி கதவுகள்

உள் அறைகளுக்கு ஏற்ற பிவிசி கதவுகள்
Updated on
1 min read

வீட்டுக்கு முகத்தைப் போன்றவை கதவுகள். அதன் லட்சணத்தை வைத்து வீட்டின் கம்பீரத்தை விருந்தினர்கள் அறிந்துகொள்வார்கள். அதனால் வீட்டின் கதவை வடிவமைப்பதில் மிகுந்த அக்கறை கொள்ளப்படுவதுண்டு. கோயில் கட்டிடக் கலைக்கு நிகரான வேலைப்பாடுகளுடன் கதவுகள் வடிவமைக்கப்படுவதுண்டு. கதவுகள் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்களின் அடிப்படையிலும் பயன்பாடு அடிப்படையிலும் வடிவ அடிப்படையிலும் பல வகை உள்ளன.

கதவுகள் முதலில் மரத்தால் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. பிறகு இரும்பு, கண்ணாடி போன்ற பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. கதவுகளை வடிவமைப்பதில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு முறை உள்ளது. அதைப் போல வீட்டின் முகப்புக் கதவு ஒரு மாதிரியாகவும், உள்ளறைகளுக்கு ஒரு மாதிரியாகவும் தயாரிக்கப்படுகின்றன.

வீட்டின் முகப்புக் கதவு பெரும்பாலும் மரத்தால்தான் செய்யப்படுகிறது. மரக் கதவுகள் வீட்டுக்குக் கம்பீரத்தையும் பாதுகாப்பையும் தருபவை. ஆனால், வீட்டின் உள்ளே அறைகளுக்கும் கழிவறைகளுக்கும் பிவிசி கதவுகள் பொருத்தமானதாக இருக்கும். இன்று கழிவறைகளுக்கு பரவலாக பிவிசி கதவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

பிவிசி கதவுகள் செய்வதற்கு மட்டுமல்லாது, அலமாரிகள் செய்யவும் இப்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

பிவிசி கதவுகளின் நன்மைகள்

பிவிசி கதவுகளின் விலை மரக் கதவுகளுடன் ஒப்பிடும்போது குறைவானது.

பிவிசி நீடித்து உழைக்கக்கூடியவை துருப்பிடிக்கும் தன்மை அற்றவை பல வண்ணங்களில் கிடைக்கிறது

பிவிசி கதவுகளைப் பராமரிக்க தேவை இல்லை

மரக் கதவுகளைப் போல் கால நிலைக்கு ஏற்ப விரிவடையும் தன்மை அற்றவை. அதனால் எல்லாக் கால நிலைக்கும் ஏற்றவை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in