குளியலறைப் பாதுகாப்பு

குளியலறைப் பாதுகாப்பு
Updated on
1 min read

வ்வளவு செலவுசெய்து வீட்டைக் கட்டினாலும், வீட்டுக்குக் குடியேறிய பிறகு வரும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று குளியலறைதான்.

மிக முக்கியமாகக் குளியலறையில் வயதானவர்கள் வழுக்கி விழுந்தால் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. எத்தனை கவனமாக அவர்கள் இருந்தாலும் அவர்கள் வழுக்கி விழுவது அடிக்கடி யாராவது ஒரு வீட்டில் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. வயதானவர்களின் காலில் பலம் இல்லாமல் இருப்பதால் மற்றவர்களைப் போல வழுக்கும் போது கால்கள் தரையைத் தாங்கி பிடிக்க இயலாது என்பதால் அவர்களுக்கு வழுக்கும் போது நிலை தடுமாறி விழுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

Mat -1

தற்போது அதற்கும் தீர்வு கிடைத்துள்ளது. குளியலறையில் வழுக்காமலிருக்க தரை விரிப்பான் போன்று வழுக்காத தரை விரிப்பு (Anti Skid Mat) ‘ஆன்டி ஸ்கிட் மேட்’ என்ற பெயரில் மேட் வந்துள்ளது. சாதாரண கால்மிதியடி போன்ற அமைப்பில் அனைத்து அளவுகளிலும் கிடைப்பதால் அதனை நமது குளியலறையின் அளவுக்கு ஏற்றவாறு வாங்கி குளியலறையில் விரித்துவிட்டால் குளியலறை வழுக்காமல் இருக்கும்.

பல வண்ணங்களில் பல டிசைன்களில் இந்த மேட் கிடைக்கிறது. ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். நகரங்களில் உள்ள பெரிய கடைகளிலும் இது கிடைக்கக்கூடும். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டுமானச் செலவுடன் இந்த செலவையும் செய்து குளியலறை பிரச்சினையை ஆரம்பத்திலிருந்தே தீர்த்துக் கொள்ளலாம்.

இந்த விரிப்பானை விரித்துவிட்டால் வழுக்காது தண்ணீரும் வழிந்தோடிவிடும் என்பதால் வயதானவர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது. இதைக் குறிப்பிட்ட தினங்களுக்கு ஒரு முறை தரையிலிருந்து அகற்றி தரையை நன்கு கழுவி பிறகு விரிப்பை விரித்துவிடவும். இப்படி செய்வதனால் கீழே தங்கியுள்ள அழுக்குகள் நீங்கி குளியலறையைச் சுகாதாரமாகப் பராமரிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in