

பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்க்கமுடியாத ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரையோ குளிர்பானங்களை வாங்கிக்குடித்துவிட்டு அப்படியே குப்பைத்தொட்டிகளில் தூக்கி எறிவதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். இந்த பிளாஸ்டிக் பாட்டில்களின் குப்பைகள் நம்மை அச்சுறுத்தும் பெரும் பிரச்சினையாக உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.