

வீ
ட்டை அழகாகப் பராமரிக்கும் ஆலோசனைகளை வழங்குவதில் ‘5-மினிட் கிராஃப்ட்ஸ்’ (5-Minute Crafts) என்ற யூடியூப் அலைவரிசை மிகவும் பிரபலமானது. வீட்டின் உள் அலங்காரம், இடத்தைத் திறம்படக் கையாளுதல், பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் எனப் பல வகையான ஆலோசனைகளை வழங்குகிறது இந்த அலைவரிசை.
அதில், வீட்டின் சுவர்களைப் புதுமையாக அலங்கரிக்க நினைப்பவர்களுக்கு இந்தக் காணொலி வழிகாட்டுகிறது.ஒளிப்படங்களைச் சுவர்களில் புதுமையாக மாட்டுவது, சுவிட்சுகளை வைத்து சுவர் அலங்காரம் செய்வது, சுவரொட்டி ஒட்டுவது, குழந்தைகள் அறையில் சுவர் அலங்காரம் செய்வது, ஒளிப்படச் சட்டகங்கள் செய்வது போன்றவற்றை எளிமையாக இந்தக் காணொலி விளக்குகிறது.
அத்துடன், பழைய ஒளிப்படச் சட்டகங்களை எப்படியெல்லாம் சுவர் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம், ‘ஸ்டிக் நோட்ஸ்’ காகிதங்களை, வால் ஸ்டிக்கர்ஸை எப்படிச் சுவர் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம் என்பதையும் இந்தக் காணொலி விளக்குகிறது.