விளம்பரத்தில் வரும் முறுக்குக் கம்பிகள்

விளம்பரத்தில் வரும் முறுக்குக் கம்பிகள்
Updated on
1 min read

வே

ட்டி விளம்பரத்துக்கு வரும் பிரபல நடிகர்கள் பலரும் அதற்கு அடுத்தபடியாக முறுக்குக் கம்பி விளம்பரத்துக்கும் வருகிறார்கள். அவர்கள் அந்தக் கம்பியின் உறுதியைப் பேசும்போது டிஎம்டி முறுக்குக் கம்பி என்பார்கள். அதில் டி.எம்.டி. என்றால் என்ன என்று ஒரு கேள்வி வரும்.

வெப்ப இயக்கவியல் சோதனைக்கு (Thermo-Mechanical Treatment-TMT) ஆளான கம்பிகள்தான் டிஎம்டி கம்பிகள் என அழைக்கப்படுகின்றன. இந்தச் சோதனையின்போது கம்பியை அதிகபட்ச வெப்பநிலையில் வைத்தும் குளிர்வித்தும் அதனுடைய தரத்தைச் சோதிப்பார்கள். அதன் மீது பாரத்தைச் செலுத்தி அதன் தாங்குதிறனையும் சோதிப்பார்கள். இந்தச் சோதனைகளுக்கு உட்படுத்திய கம்பிகள்தான் தரமானவையாக இருக்கும்.

இந்த டிஎம்டி சோதனை முக்கியமானது. நமது கட்டுமானக் கம்பிகளுக்கு அவசியமானது. அதனால் வாங்கக்கூடிய கம்பிகள் டிஎம்டி கம்பிகளா எனச் சரிபார்த்து வாங்க வேண்டும். அதுபோலக் கம்பிகள் எண்ணெய் பிசுபிசுப்போ சேறோ படியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், கான்கிரீட்டுடன் அவை பிணைப்பில்லாமல் போக இந்த எண்ணெய்ப் பிசுக்கு ஒரு காரணமாக இருக்கும்.

கட்டுமானக் கம்பிகள் தயாரிப்பில் இன்றைக்குப் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. கட்டுமானக் கம்பிகளில் பல முறைகேடுகளும் நடக்கின்றன. கழிவு இரும்புகளை மூலப் பொருளாகக் கொண்டு கம்பிகள் தயாரிக்கப்படும்போது அதன் தாங்கு திறன் எதிர்பார்த்த அளவு இருக்காது.

அதனால் வீட்டின் பாரம் தாங்க முடியாமல் கம்பிகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது. அதனால் கம்பிகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.கட்டுமானக் கம்பிகளின் தாங்கு திறனைச் சோதனை செய்ய இப்போது யுனிவர்சல் டெஸ்டிங் மெஷின் என்ற ஒரு இயந்திரம் உள்ளது. அதில் ஒரு மாதிரிக் கம்பியை வைத்து அதன் தாங்கு திறனைச் சோதிக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in