

வானுயர்க் கட்டிடங்கள் பிரமிப்பானவை. உலகப் புகழ்பெற்ற கட்டிடவியலாளரான ஃபிராங்க் லாயிட் ரைட்டின் ஒவ்வொரு கட்டிடமும் கட்டுமான வடிவமைப்பு தொடர்பாக பயில்வோருக்குப் பாடம். இதுபோல் ஃப்ராங் கெரி, ஷாஹா ஹதித், ஜோன் அட்சன், சீஸர் பெல்லி, ழான் நோவல் எனப் பலரது கட்டிடங்களும் உள்ளன.
மிகப் பொறுப்புடன் அணுகும் இந்தப் பாடங்களை, பிரேசிலைச் சேர்ந்த கட்டுமான வடிவமைப்பாளர் தனது கணினியில் விளையாட்டுப் பொருள்களாக மாற்றிவிட்டார். உலகின் இந்தப் புகழ்பெற்ற கட்டிடங்களை அன்றாட உபயோகப்படுத்தும் பொருள்களுடன் ஒப்பிட்டுக் கேலிக்கையாக வரைந்திருக்கிறார்.
உதாரணமாக ஃபிராங்க் ரைட் வடிவமைத்த நியூயார்க் சாலமன் ஆர். குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தை ஆரஞ்சு பிழியும் இயந்திரமாக்கியிருக்கிறார். இதுபோன்று 26 கட்டிடங்களை வரைந்திருக்கிறார்.