அலைகளின் மேல் அதிசய உணவகம்

அலைகளின் மேல் அதிசய உணவகம்
Updated on
1 min read

‘ஏழு மலை ஏழு கடல் தாண்டினால் ஒரு மாய மாளிகை இருக்கும்...’ என மந்திரக் கதைகள் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் கடலைத் தாண்டிப் பார்த்தால் மாய மாளிகை எதுவும் இருக்காது என நமக்குப் புரிந்திருக்கும்.

ஆனால் உண்மையில் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டித் தீவில் இம்மாதிரியான மாய மாளிகை நிஜமாகவே இருக்கிறது. சான்சிபர் என்னும் குட்டித் தீவு கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது. இது சுற்றுலாவாசிகளின் தனித்துவமான இடம். வானின் நீலம் கொண்டு மயங்கிக் கிடக்கும் கடற்கரை, காணும் எவரையும் கவர்ந்து இழுத்துவிடும்.

கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும் அந்த நிலத்தில், அலைகளுக்கு நடுவில் ஒரு குட்டி மலை இருக்கிறது. அதைப் பாறை என்றுதானே சொல்ல வேண்டும். ஆம்! அந்தப்பாறையின் மீது அமைந்திருக்கிறது இந்த உணவு விடுதி. அதன் பெயரே ‘தி ராக் ரெஸ்டாரெண்ட்’ (பாறை உணவு விடுதி). மய்க்கன்வாய் பிங்வே கடற்கரையில் இந்த உணவு விடுதி அமைந்துள்ளது. இதில் பலதரப்பட்ட கடல் சார்ந்த உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.

இந்த உணவு விடுதியில் அமர்ந்திருக்கும்போது உலகத்தின் பரபரப்பைவிட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்ட உணர்வு ஏற்படுவதாக இங்கு சென்றுவந்த பயணிகள் தெரிவிக்கின்றனர். கடலுக்கு நடுவே எழுந்துள்ள மாய மாளிகை போல இந்த உணவு விடுதி சுற்றுலாவாசிகளைக் கவர்ந்துவருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in