

ம
காபலிபுரம் செல்லும் சாலையில் வடநெம்மேலியில் உள்ளது சென்னை முதலைப் பண்ணை. 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் இந்தப் பண்ணையில் 23 வகையான முதலைகள் உள்ளன. முதலைகள் மட்டுமல்லாது ஆமைகள், பாம்புகள் உள்பட 35 வகையான ஊர்வன விலங்குகளும் இங்கு உள்ளன. இவற்றுள் சில அழியும் நிலையிலுள்ள அபூர்வமான உயிரினங்கள்.
செவ்வாய் - ஞாயிறுவரை செயல்படும் இந்தப் பண்ணையை இப்போது இரவிலும் பார்வையிடலாம். இரவில்தான் முதலைகளின் தனித்துவமான நடவடிக்கைகளைக் கவனிக்க முடியும் என முதலைப் பண்ணையின் குறிப்பு சொல்கிறது. பகலைவிட இரவில் அவை சுதந்திரமாக உலவும். மேலும் இந்தக் கோடைக்காலத்தில் வெயில் குறைந்த மாலை நேரத்தில் முதலைப் பண்ணைக்குச் செல்வது இதமான அனுபவமாக இருக்கும்.
பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரு டார்ச் லைட் தரப்படும். அதன் உதவியால் சிவப்பாக மினுங்கும் பல நூறு முதலை கண்களைப் பார்க்கலாம். இரவு 7.00 மணியிலிருந்து 8.00 மணிவரை பார்க்கலாம். குழந்தைகளுக்கு (10 வயசுக்குள்) ரூ.100-ம் பெரியவர்களுக்கு ரூ.200-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் விபரங்களுக்கு: 9791257916