அக்கம் பக்கம்: வீட்டுக்கு வரும் வண்டலூர்

அக்கம் பக்கம்: வீட்டுக்கு வரும் வண்டலூர்
Updated on
1 min read

கோ

டை விடுமுறையைக் கழிக்க வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்குச் செல்ல வேண்டும். ஆனால் வெயில் வேறு கொளுத்தி எடுக்கிறதே என இனிக் கவலைப்பட வேண்டாம். வீட்டிலிருந்தபடியே விலங்குக் காட்சி சாலை விலங்குகளை வேடிக்கை பார்க்க முடியும். விலங்குகளின் காணொளிக் காட்சிகள் நேரடியாக இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன.

www.aazp.in என்ற இணையதளத்துக்குச் சென்றால் அங்கு இடது ஓரத்தில் LIVE - Animal Yard என்ற இடத்தில் சொடுக்கினால் அடுத்த பக்கம் விரியும். அந்தப் பக்கத்தில் Animal Display Area - Live Streaming என 14 வகையான விலங்குகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலிலுள்ள விலங்குகளின் படத்துக்கு நேராகச் சொடுக்கினால் அந்தக் குறிப்பிட்ட மிருகம் இருக்கும் இடத்தின் காணொளிக் காட்சித் திரையில் தோன்றும். சிங்கம், புலி, குரங்கு, நீர் யானை, காட்டெருமை, சிறுத்தை, முதலை உள்ளிட்ட பல விலங்குகள் இதில் உள்ளன.

இந்த இணையதளத்திலேயே நேரில் செல்வதற்கான நுழைவுச் சீட்டையும் அங்கு தங்கி விலங்குகளைப் பார்ப்பதற்கான வசதியையும் முன்பதிவுசெய்துகொள்ள முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in