

வீ
டு கட்ட முடிவெடுத்ததும் வீட்டை எப்படிக் கட்டுவது, வடிவமைப்பது எனப் பல கேள்விகள் எழும். உள்புற வடிவமைப்புக்கு பொறியாளர்களின் யோசனைகள் இருந்தாலும் நமக்கு ஒரு கனவு இருக்கும் இல்லையா? அதை நினைத்துப் பார்த்து பொறியாளரிடம் சொன்னால் அவர், அதற்கு தகுந்தாற்போல் வடிவமைப்பை வரைந்து தருவார்.
வீட்டை வடிவமைப்பவர்களுக்கு உதவியாக சில இணைய தளங்கள் மாதிரி வரை படங்களைத் தருகின்றன. அம்மாதிரியான இணையதளங்களுள் ஒன்றான http://www.martiallink.com/-ல் பார்த்த இரு படுக்கையறை வரைபடம் இது. இந்த இணையதளத்தில் இம்மாதிரிப் பல வகையான வீட்டு வரைபடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதுபோல வீட்டின் முகப்பு வடிவமைப்பதும் வடிவமைப்பில் முக்கியம். வீட்டின் அழகை எடுத்துக் காட்டக்கூடியது. இதன் வடிவமைக்கவும் மாதிரி படங்கள் உதவியாக இருக்கும். இந்த மாதிரிப் படங்களைக் கொண்டு நம் வீட்டின் முகப்பைத் தீர்மானிக்கலாம்.
வீட்டின் முகப்பை வடிவமைக்க http://hhomedesign.com/ என்னும் இணைய தளத்தில் பல மாதிரிப் படங்கள் உள்ளன.