

வீ
ட்டை அழகுபடுத்துவதில் விளக்குகளுக்கு முதன்மையான பங்குண்டு. வீட்டுக்கு அழகான வண்ணப் பூச்சு செய்தாலும் அதை எடுத்துக்காட்ட விளக்குகள் அவசியம். அவற்றுள் பல வகை உண்டு.
வீட்டின் நடுவே உத்தரத்தில் தொங்கவிடப்படுவதால் இந்த விளக்குகள் தொங்கு விளக்குகள் என அழைக்கப்படுகின்றன.இவற்றில் இன்று பலவிதமான மாதிரிகள் வந்துவிட்டன. வீட்டின் நடுவில்லாதது ஓரத்திலும் இந்த வகை விளக்குகள் அமைக்கப்படுகின்றன. மரத்தால், காகிகத்தாலும் இந்த விளக்குகள் செய்யப்படுகின்றன.
பந்து வடிவ மின் கூண்டில் விளக்குகளை அடைத்துத் தொங்கவிடப்படும் முறையில் இந்த விளக்குகள் செய்யப்படுகின்றன. சீனப் புத்தாண்டை ஒட்டி சீனாவில் சிவப்பு வண்ணத்தில் இந்த வகை விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த விளக்குகள் சிவப்பு மட்டுமல்லாது பலவிதமான வண்ணங்களில் இன்று கிடைக்கின்றன.
ஐரோப்பியக் கலாச்சாரத்தில் பண்டைய காலத்திலிருந்து இந்த விளக்குகள் பயன்படுத்தபட்டுவருகின்றன. முன்பு மின் விளக்குகளுக்குப் பதில் மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்பட்டன. பிரதானமான கூடங்களை அலங்கரிக்க இந்த விளக்குகள் பயன்பட்டன. அரச அவை, ஆலயங்களிலும் இந்த விளக்குகள் பயன்பட்டு வந்தன. பூக்கொத்து போல இந்த விளக்குகள் பல விளக்குகளைக் கொண்டவை. இந்த விளக்குகள் வீட்டின் வரவேற்பறைக்குக் கம்பீரத் தோற்றத்தை அளிப்பவை.
வரந்தா, பின் வாசல், முன் வாசல் போன்ற பகுதிகளில் பயன்படுத்தத்தக்கவை. பண்டைய காலங்களில் மாடப் பகுதிகளில் இம்மாதிரி வடிவ விளக்குகளைக் கொளுத்தி வைக்கும் வழக்கம் இருந்தது. இப்போது இம்மாதிரி விளக்குகளின் பலவிதமான வடிவங்கள் வந்துவிட்டன.
மேஜை விளக்குகள் இன்றைக்கு அதிகமாகப் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. ஆனால், சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை மேஜை விளக்குகள் செல்வந்தர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்துவந்தன. ஆனால், இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினரும் மிக அதிகமாக மேஜை விளக்குகளைப் பயன்படுத்திவருகிறார்கள். ஆரம்ப காலத்தில் மேஜைகளில் மெழுகுவர்த்திகளைப் பொருத்திவைத்து அவற்றையே மேஜை விளக்குகளைப் போல் பயன்படுத்தியிருக்கிறார்கள்.