

த
மிழர் வாழ்க்கைத் திணைகளுள் ஒன்று முல்லை. காடும் காடு சார்ந்த வாழ்க்கை. இம்மாதிரியான முல்லைத் திணை வாழ்க்கையில் இருக்கிறார் எழுத்தாளர் குமார் அம்பாயிரம். இயற்கை அறிவியலாளரான கோ.நம்மாழ்வாரிடமும் இவர் பணியாற்றியுள்ளார். டிஜிருடு என்ற ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் இசைக் கருவியை இசைப்பதில் விற்பன்னர். ‘ஈட்டி’ என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழில் சிறந்த எழுத்தாளராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விவசாயத்துக்கான நிலத்தை தயார்படுத்துவதிலும் மாற்றுக் கட்டுமானம் ஆகிய துறைகளில் சுதந்திரமாக இயங்கிவருகிறார். சிமெண்ட், ஜல்லி, செங்கல் எதுவுமில்லாமல் அந்தப் பகுதியில் கிடைக்கும் மரம், ஓலைகளைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் கட்டுமானங்களை உருவாக்கிவருகிறார். அப்படியான கட்டுமானம் ஒன்றை சமீபத்தில் கட்டியுள்ளார். நெமிலிச்சேரியில் அவர் உருவாக்கிய கோடைக்கால இருப்பிடம் ஒன்றைத் தன் முகப்புத்தகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது உருவான நிலையிலிருந்து இன்று கட்டுமானமாக நிற்கும்வரையிலான படங்கள் இவை: