படுக்கையறை மேஜைகள்

படுக்கையறை மேஜைகள்
Updated on
2 min read

டுக்கையறை அறைக்கலன்களில் முக்கியமானது, படுக்கையோர மேஜை. நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் இந்த அறைக்கலன் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. இப்போது இந்த அறைக்கலன் உலக அளவில் பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

படுக்கையோர மேஜை பல வகையில் பயன் தரக்கூடியது. படுக்கையறையில் அதிக வெளிச்சம் தேவையற்றது. அதனால் சிறு மேஜை விளக்கு வைத்துக்கொள்வது போதுமானது. அந்த மேஜை விளக்கை வைத்துக்கொள்ளும் மேஜையாக இது பயன்படும். காலையில் எழுந்துகொள்வதற்காகக் கடிகாரத்தில் அலராம் செய்துவைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர்களுக்கு, அதை வைத்துக்கொள்ளும் மேஜையாக இது பயன்படும்.

இரவில் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், புத்தகங்கள் வைத்துக்கொள்ளும் அலமாரியாக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மனத்தைப் புத்துணர்வு அளிக்கக்கூடிய சிலைகளை வைத்துக்கொள்ளவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டுக்குள் வளரக்கூடிய செடிகளைக்கூட இதில் வைத்து வளர்க்கலாம். தொலைபேசி, ஏசி ரிமோட், டிவி ரிமோட் ஆகியவற்றை வைத்துக்கொள்ளவும் இதைப் பயன்படுத்தலாம். இதன் பயன்பாடு, வடிவமைப்பைப் பொறுத்து இதில் பல வகை உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in