பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வீட்டுக் கடன்கள் வாங்கும் கலை

பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வீட்டுக் கடன்கள் வாங்கும் கலை
Updated on
2 min read

பாரம்பரியமாக  இந்திய வங்கி சந்தையில் வீட்டினை வாங்குவதென்றால் நல்ல சம்பளத்துடன் இருக்கும் திருமணமாகாதவர்களையோ, இளைய குடும்பத்தினர்களையோ தான் குறிவைத்து கடன்களை கொடுத்து வந்தனர். அதே சமயம் பெண்கள், மூத்த குடிமக்களுக்கு மற்றும் சற்றே பொருளாதரத்தில் பின் தங்கியிருக்கும் திருமணமாகாதவர்களையோ  குடும்பத்தினர்களுக்கோ முக்கியத்துவம் அளித்ததில்லை.

ஆனால் தற்போது நிலைமை மாறத்துவங்கியுள்ளது. சமீப காலமாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களை குறி வைத்து பிரத்யேகமான வீட்டு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

நகர்புறங்களில் வீடு வாங்குபவர்களில் 30% சதவீதம் பெண்கள் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இன்று நிறைய பெண்கள் வேலைகளுக்கு செல்வதாலும், திருமணத்திற்கு பின்னர் சுதந்திரமாக இருக்க வேண்டும் என எண்ணுவதாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.  பெண்களுக்கு பிரத்யேகமான வீட்டு கடன் திட்டங்களில் சில எஸ்பிஐ ஹெர் கர்  , ஹெச்.எல்.எஸிடமிருந்து 'பவர் பவர்' மற்றும் 'ஐசிஐசிஐ'யின் பெண் கடனாளர்களுக்கான திட்டங்கள்.

பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வீட்டுக் கடன்களின் சில முக்கிய நன்மைகள்:

வரி விலக்குகள்

சுய தொழில் மற்றும் ஊதியம் பெறும் பெண்கள் தற்போது கடன் மீதான வட்டி விகிதத்தில் 2 லட்சம் வரை சிறப்பு வரி விலக்குகளை பெற்று வருகின்றனர். இணை உரிமையாளர் அல்லது விண்ணப்பதாரர் ஒரு பெண்ணாக இருந்தால், மேலும் வரி குறைப்புக்கள் கிடைக்கும்.

முத்திரை தாள் வரி சலுகை

உதாரணமாக ஹரியானா போன்ற பல மாநிலங்கள், பெண்களுக்கு முத்திரை தாள் வரியில் சலுகை வழங்குகின்றன. சலுகைகள் 1% முதல் 2% வரை மட்டுமே இருந்தாலும், அது அவர்களது நீண்ட நாள் சேமிப்பை மிச்சப்படுத்துகிறது.

வட்டி விகிதம்

ஆண்களை ஒப்பிடும் போது பெண்களுக்கு வட்டி விகிதத்தில் சுமார் 0.05% அளவிற்கு குறைவாக கிடைக்கிறது. இது சிறிய அளவு தான் என்றாலும் 20 - 30 வருடங்கள் செலுத்தும் கடனில் பெரிய தொகை மிச்சமாகும்.

அதிக ஏற்றுக்கொள்ளும் விகிதங்கள்

ஆண்களை ஒப்பிடுகையில் கடனை உரிய நேரத்தில் திரும்ப செலுத்துவதில் பெண்கள் முன்னிலை வகிப்பதால் அவர்கள் கடன் விண்ணப்பங்கள் அதிக அளவில் ஏற்று கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெகு வருடங்களாக மூத்த குடிமக்களுக்கும், பெண்கள் போல் வீட்டு கடன் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அது 2007ம் ஆண்டு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'ரிவரஸ் மார்டேஜ்' எனப்படும் மறு அடமானக் கடன் திட்டத்தால் மூத்த குடிமக்கள் வழி செய்தது.

வீடு வாங்க மாதா மாதம் நாம் கடன் செலுத்திய காலம் போய், வீடு நமக்காக ஒவ்வொரு மாதமும் பணம் தருவது தான்  மறு அடமானக் கடன்/ இவ்வகை கடன் திட்டத்தில், தங்களுடைய வீட்டின் மதிப்பிற்கு உட்பட்ட தொகையை ஒட்டு மொத்தமாகவோ அல்லது மாதா மாதம் ஒரு தொகையாகவோ பெற முடியும். கடன் தொகையை திரும்பக் கட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

இது ஒரு கவர்ச்சிகரமான திட்டமாக இருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக அது பிரபலமடையவில்லை. குறைபாடுகள் இருந்தாலும்,  இறுதியில் இந்த சிறப்பு வீட்டு கடன்கள் இந்திய சமுதாயத்தின் இந்த பிரிவுகளுக்கு ஒரு வரம் தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in