

உ
லகில் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று வீடுகளை அலங்கரிப்பது கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. இதற்காகத் தனியே உள்அலங்கார நிபுணர்களும் இருக்கிறார்கள். வீட்டுக்குள்ளும் வெளியேயும் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிப்பது வழக்கம். வீட்டை அலங்கரிப்பதுபோல நகரையும் அலங்கரிப்பதும் மேலை நாடுகளில் வழக்கம். இதனால் பிரபல நகரங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது கண்ணைக்கவரும் அலங்காரத் தோற்றத்தில் மிளிர்கின்றன. இந்தக் கொண்டாட்டங்களின்போது பிரபல கட்டிடங்கள் அலங்கரிக்கப்படுவது ஆண்டுதோறும் புதுமையுடனும் படைப்பாற்றலுடனும் மாறிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இந்த ஆண்டும் கிறிஸ்துமஸையும் புத்தாண்டையும் வரவேற்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு பிரபல கட்டிடங்களும் சந்தைகளும் அலங்காரக்கோலம் பூண்டிருக்கின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக அலங்கரிக்கப்பட்டிருக்கும் உலகக்கட்டிடங்களின் தொகுப்பு.