

வி
லங்குகளிடமிருந்தும் இயற்கைப் பாதிப்பிலிருந்தும் தற்காத்துக்கொள்ளக் கதவுகள் வந்தன. திருட்டு பயம் வந்தபோதுதான் கதவுகள் பலமுடையதாக மாறின. ஆனால் பிறகு கதவுகள் என்பவை வீட்டைப் பாதுகாப்பதற்கானது மட்டுமானதாக இருக்கவில்லை. கதவுகள் ஒரு காலகட்டத்தை, கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவை. பிரான்ஸில், எகிப்து, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான் என ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு விதமான கதவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதைவிட நம்நாட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கதவுகள் அமைப்பு முறை வேறுபடுகின்றன. ராஜபுத்திரர்களின் கலையை ராஜஸ்தான் கதவுகளில் பார்க்கலாம். அதுபோல் தமிழ்நாட்டில் செட்டிநாடு வீடுகளின் கதவுகளும் தனித் தன்மை கொண்டவை. நம்முடைய புராணங்களை வெளிப்படுத்துவதுபோல தெய்வச் சிலைகள் கதவுகளின் நிலைகளைச் சுற்றிச் செதுக்கப்பட்டிருக்கும். அதுபோல பூ வேலைப்பாடுகளும் இருக்கும். கேரளக் கதவுகளும் செட்டி நாட்டுக் கதவுகள் போல வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கும். இம்மாதிரிக் கலை வண்ணம் கொண்ட கதவுகளின் ஒளிப்படத் தொகுப்பு இது: