

உ
லகின் முக்கியமான வணிக மையம் துபாய். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடுசெய்யப் போட்டிபோடுகின்றன. ஆனால், துபாய் ரியல் எஸ்டேட் தொழிலைப் பொறுத்தவரை இந்திய முதலீட்டாளர்களே கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். இந்த ஆண்டும் இந்த ஆதிக்கம் தொடர்வதாக சமீபத்தில் வெளியாகியுள்ள துபாய் நிலத் துறையின் அறிக்கை (Dubai Land Department Report) சொல்கிறது.
கடந்த 18 மாதங்களில் 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியர்கள் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது 40 சதவீதம் அதிகம். கடைசியாக 2014-ம் ஆண்டில் இந்தியர்கள் முதலீடு 30 ஆயிரம் கோடியைத் தொட்டது. இதுவே அதிகபட்ச முதலீடாக இருந்து வந்தது. பொதுவாக துபாய் உள்ளிட்ட பல வளைகுடா நகரங்கள் இந்தியர்களின் வியர்வையில் எழுந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. அங்கே பலதரப்பட்ட பணிகளைச் செய்வது நம்மவர்கள்தான். துபாய் அசுர வளர்ச்சியில் இந்திய உழைப்பாளிகளின் பங்கு கணிசமான அளவுக்கு இருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் துபாய் நிலத் துறையின் இந்த அறிக்கை துபாய் நகரில் முதலீடு செய்வதிலும் இந்தியர்களின் பங்கு ஓங்கியிருப்பதைக் காட்டுகிறது.
துபாயில் முதலீடுசெய்யும் இந்தியர்களின் ஆர்வத்தைக் கணக்கில் கொண்டு மும்பையில் துபாயில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டுக் கண்காட்சியைக் கடந்த வாரம் நடத்தின.