

க
ட்டிடக் கலையில் நாள்தோறும் புதுமைகள் நிகழ்கின்றன. உலகின் பல பாகங்களில் புதிய கட்டுமானச் சாதனங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தக் கட்டிடக் கலைக்குப் புதிய மாதிரிகளை ஒரு பேக்கரி வழங்கியுள்ளது. அமெரிக்காவிலுள்ள இந்த பேக்கரி, கட்டிடக் கலை குறித்த புத்தகங்களை வைத்து மாதிரிக் கட்டிடங்களை உருவாக்கியுள்ளது. சிமெண்ட் கலவை கொண்டல்ல, ஐஸ்கிரீம் கலவை கொண்டு உருவாக்கியுள்ளார்கள். உதாரணமாக The Cooper Hewitt எழுதிய Making Design புத்தகத்தை ரெட் வெல்வெட் ஐஸ்கிரீம் மீது தட்டைக் கோபுரமாக வடிவமைத்துள்ளனர். Michael Meredith எழுதிய Selected Works புத்தகத்தை கூம்பு வடிவ ஐஸ்கிரீம் மீது வடிவமைத்துள்ளனர். Virginia McAlester எழுதிய A Field Guide to American Houses புத்தகத்தை புர்ஜ் கலீபா போல வானுயர் கட்டிடமாக வடிவமைத்துள்ளனர். இதுபோல் கட்டுமானத் துறையில் புகழ்பெற்ற பல புத்தகங்கள் சுவை மிக்க ஐஸ்கிரீம் கட்டிடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.