

பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள். இந்தச் சமூகத்தின் அனைத்துமே ஆண்களால் வடிவமைக்கப்பட்டவை. இதிகாசப் புராணங்கள், இலக்கியங்கள், திரைப்படங்கள், கலைகள் போன்ற எல்லாமுமே ஆண் மொழி பேசுபவை.
எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கிற முக்கியத்துவம் வாய்ந்த அரசியலும் ஆண்களின் குணம் கொண்டதாகவே இருப்பதைப் பார்க்க முடியும். குறைகள் ஏதுமின்றி மக்கள் நலம் பேணுவதாகவும் முன்னோடித் தலைவர்களின் தலைசிறந்த கனவுகளை நிறைவேற்றும் வகையிலும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் அரசியல். ஆனால், நிதர்சனத்தில் அவ்வாறு இல்லை என்பது ஊரறிந்த உண்மை.