

பெண்கள் எழுதவருவது எல்லாக் காலத்திலும் இயல்பானதாக இருந்ததில்லை. தடைகளைத் தாண்டியும் தூற்றுதல்களைப் புறக்கணித்தும் வீட்டுக்குத் தெரியாமலும் அடையாளத்தை மறைத்தும் எவ்வளவோ பெரும் சாகசங்களைச் செய்துதான் பெண்கள் பலரது எழுத்துகள் அச்சு வடிவம் காண்கின்றன.
காலமாற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் பெண்கள் எழுதுவதற்கான களத்தை ஓரளவுக்குச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. புத்தகக் காட்சிகளில் படைப்பாளர்களாகவும் வாசகர்களாகவும் வலம்வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது நல்லதொரு மாற்றம். 2025இல் வெளியாகி, வாசகர்களின் பரவலான பார்வைக்குச் செல்லாத பெண்கள் சார்ந்த – பெண்கள் எழுதிய புத்தகங்களில் சில: