பெண்ணும் தொழிலாளரே!

மே 1: உலகத் தொழிலாளர் நாள்
பெண்ணும் தொழிலாளரே!
Updated on
2 min read

மகளிர் தினம் வந்துவிட்டால் போதும், நெட்டிசன்கள் வீறுகொண்டு எழுந்து விடுவார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைத் திறம்படச் செய்யும் பெண்களின் திறனை வியந்து அதுபோன்ற படங்களைப் பகிர்வதோடு சகோதரியாய், அம்மாவாய், பாட்டியாய்... என்று உணர்வு வயப்பட்டு வாழ்த்துகளைக் குவிப்பார்கள். ஆனால், உலகத் தொழிலாளர் நாள் வரும்போது யாருக்கும் பெண்களின் நினைவே வராது.

மே 1 உலகத் தொழிலாளர் நாளையொட்டி வெளிவரும் சிறப்புக் கட்டுரைகள், செய்திகளில் பெண்களை அழுத்தமாக முன்னிறுத்துவது இல்லை. ‘அனைத்துத் துறைகளிலும் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்’ என்று மேலோட்டமாக ஓரிரு வரிகள் தென்படுமே அன்றிப் பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முனைப்பு இருக்காது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in