என் குழந்தைகளுக்கு யார் சமைப்பது? | பெண்கள் 360

என் குழந்தைகளுக்கு யார்  சமைப்பது? | பெண்கள் 360
Updated on
1 min read

டெல்லியில் 24 வயது மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையில் மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 30 வயதுப் பெண் ஒருவர் வேலை முடிந்து இரவு வீடு திரும்பும் வழியில் தனியார் பேருந்துக்குள் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்.

பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அவர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்த பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காயங்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தினர். அந்தப் பெண்ணோ, தன் கணவர் காசநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் வீட்டில் இருக்கும் தன் மூன்று குழந்தைகளுக்குச் சமைக்க வேண்டும் என்றும் கூறி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in