

உலக வங்கி, ஐ.நா. தரவுகளின்படி உலகளாவிய பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் என்பதாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருப்பதாகத் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு - 5 (2019 – 21) தெரிவிக்கிறது. கேரளம் பாலின விகிதத்தில் முன்னிலை வகிக்கிறது.
ஹரியாணா மிகவும் பின்தங்கியிருக்கிறது. உலகச் சராசரியைவிட இந்தியாவில் பாலின விகிதம் அதிகமாக இருந்தாலும் பாலினப் பாகுபாடுகள் அதிகமாக உள்ளன. குறைந்துவரும் கருவுறுதல் விகிதம், மேம்பட்ட மகப்பேறு மருத்துவ வசதிகள், பெண் கல்வி உயர்வு, வேலைப் பங்களிப்பில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை பாலின விகிதத்தை உயர்த்தியுள்ளன. அரசின் கொள்கைரீதியான மாற்றங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு.