பொன்விழா ஆண்டில் மகளிர் கிரிக்கெட் அணி! | பெண்கள் 360

பொன்விழா ஆண்டில் மகளிர் கிரிக்கெட் அணி! | பெண்கள் 360
Updated on: 
2 min read

1976ஆம் ஆண்டு உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 50 ஆண்டுகளைக் கடந்து பொன்விழா ஆண்டைக் கொண்டாடிவருகிறது.

1976, அக்டோபர் 31 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதன் முதலாக டெஸ்ட் போட்டித் தொடரில் களமிறங்கிய இந்திய அணி இன்று உலக அரங்கில் அரை நூற்றாண்டைக் கடந்த சாதனையுடன் கம்பீரமாக நிற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு சாந்தா ரங்கசாமி கேப்டனாக இருந்தார். அந்தத் தொடரின் நான்காவது போட்டியில்தான் இந்த அணி தனது முதல் வெற்றியைப் பெற்றது.

1978இல் டயானா எடுல்ஜி தலைமையில் சர்வதேச ஒருநாள் போட்டி, மகளிர் உலகக் கோப்பை ஆகிய போட்டிகளில் பங்கேற்றது. 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி, 2025ஆம் ஆண்டில் மகளிர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றது. அதே ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.

Loading content, please wait...

X