பெண்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படுமா? | பெண் கோணம்

பெண்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படுமா? | பெண் கோணம்
Updated on
3 min read

தமிழ்நாட்டில் பெண் வாக் காளர்கள் எண்ணிக்கை ஆண் களைவிட அதிகம். இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பும் அதிகம். ஆனால், நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது வருத்தமளிக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு இடமளிக்கவில்லை என்கிறபோதும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகளும் பெண் வாக்காளர்களின் வாக்குகளைப் பெறக் கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. அவர்களை மையப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து அவர்களைக் கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளன.

பெண்களுக்கான உரிமைத் தொகை அதிகரிப்பு, கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், திருமணத்திற்குத் தங்கம், பட்டுப் புடவை, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்று பல்வேறுவிதமான நலத்திட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. இந்த அறிவிப்பு களோடு பெண்களின் முக்கியமான கோரிக்கை களும் நிறைவேற்றப்பட வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in