

பொறியியல் படிப்பை முடித்ததுமே எனக்குத்திருமணமாகிவிட்டது. நான் கருவுற்றிருந்தபோது பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கு வழக்கத்துக்கு மாறான எதிர்ப்பு இருந்ததைச் செய்திகளில் படித்தேன். இப்படி எதிர்ப்பு எழும் அளவுக்கு அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று நான் வாங்கிய முதல் நாவலும் அதுதான். படித்து முடித்த பிறகுதான் ‘பலத்த’ எதிர்ப்புக்கான காரணம் புரிந்தது.
இதேபோல் வேறு ஏதேனும் கதைகளுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருந்ததா என்று தேடிப் பார்த்ததில் ஜெயகாந்தனின் ‘அக்னி பிரவேசம்’ நாவல் விடையாகக் கிடைத்தது.