சிக்கலைத் தீர்த்த ‘சின்ன நூல்கண்டு’ | வாசிப்பை நேசிப்போம்

சிக்கலைத் தீர்த்த ‘சின்ன நூல்கண்டு’ | வாசிப்பை நேசிப்போம்
Updated on
1 min read

எழுத்தாளர் சிவசங்கரி, 1985இல் ஜூனியர் விகடன் பத்திரிகையில் ‘சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது’ என்கிற தலைப்பில் தொடராக எழுதியது, பின்னர் நூலாக வெளியிடப்பட்டு என் வாழ்க்கையையே மாற்றியது. எனக்கு ஐம்பது வயதில் மெனோபாஸ், மிகை தைராய்டு போன்ற உடல்நலம் சார்ந்த குறைபாடுகளும் குடும்பத்தில் சில பிரச்சினைகளும் இருந்ததால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால், வீட்டில் கணவரிடம் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன.

திருமணமாகி வெளியூரில் வசித்த என் மூத்த மகளிடம் தொலைபேசியில் ‌புலம்பிக்கொண்டிருப்பேன். அவள் இந்தப் புத்தகத்தை வாங்கி எனக்கு அனுப்பிவைத்துப் படிக்கச் சொல்லிப் பரிந்துரைத்தாள். உடனே முழுமூச்சாக இரண்டு, மூன்று முறை படித்தேன். அதன் பிறகுதான் மனதில் ஒரு தெளிவு ஏற்பட்டது. ஆரோக்கியமும் மேம்பட்டுக் குடும்பத்தினருடன் இணக்கமாகச் செயல்பட முடிந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in