மாணவி அளித்த இனிய அதிர்ச்சி! | வாசிப்பை நேசிப்போம்

மாணவி அளித்த இனிய அதிர்ச்சி! | வாசிப்பை நேசிப்போம்
Updated on: 
1 min read

நான் தனியார் பள்ளியில் பணிபுரியும் தமிழாசிரியர். புத்தக வாசிப்பின் மீது எனக்குத் தீவிர நம்பிக்கை உண்டு. புத்தகங்கள் என்பவை எழுத்துகள் கோக்கப்பட்ட தாள்கள் அல்ல; என்னிடம் இருந்த தயக்கங்களை, சந்தேகங்களை, அவநம்பிக்கைகளை, வாழ்க்கைக்கு உதவாத பல்வேறு விஷயங்களை நீக்கி என்னைச் செதுக்கும் ஒப்பற்ற சிற்பிகள்.

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை விதைக்க வேண்டும் என்பதற்காக நான் படித்த பல்வேறு புத்தகங்களைப் பற்றி மாணவர்களிடையே பகிர்வது என் வழக்கம். நடத்தப்போகும் பாடப்பகுதியோடு தொடர்புடைய கருத்துகளைத் தற்காலப் புத்தகங்களோடும் கதைகளோடும் தொடர்புபடுத்திச் சொல்வது என்னுடைய கற்பித்தல் முறைகளில் ஒன்று. நன்றாகப் படிக்கக்கூடிய என் மாணவி ஒருத்தி, நான் சொல்லும் கருத்துகளிலிருந்து என்னோடு விவாதிக்கக்கூடிய வகையில் சிறந்த அறிவும் மொழித்திறனும் கொண்டவளாக விளங்கினாள். அவளது கூர்மையான அறிவையும் மொழித்திறனையும் நான் பலமுறை பாராட்டியிருக்கிறேன்.

Loading content, please wait...

X