

எனக்கு எட்டு வயது இருக்கும்போதே என்னிடம் நாள்தோறும் நாளிதழைக் கொடுத்து வாசிக்கச் சொல்லி என் அப்பா கேட்பார். எங்கள் குடும்பத்தில் பள்ளிக்குச் சென்று படித்த முதல் பெண் நான்தான். அப்பாவுக்காக நாளிதழ், அத்தைக்காக ராணிமுத்து நாவல் என என் வாசிப்பு தொடங்கியது. அதன் பின் குமுதம், ஆனந்த விகடன், கல்கண்டு, சாவி, இதயம் பேசுகிறது நாவல், குங்குமம், துக்ளக் என வார இதழ்களை வாசித்தேன். பிறகு கல்கி, சாண்டில்யன், வாஸந்தி, இந்துமதி போன்றோரின் நாவல்களோடு வாசிப்பு தொடர்கதையானது.