தேங்காய் ஓட்டிலே கலைவண்ணம் கண்டார்! | வானவில் பெண்கள்

படங்கள் ஜெ.மனோகரன்

படங்கள் ஜெ.மனோகரன்

Updated on
2 min read

உலகம் முழுவதும் வெப்பநிலை உயர்வு, காட்டுத்தீ, கடல் சீற்றம் எனப் பேரழிவுகளை ஏற்படுத்திவரும் எல்நினோ தற்போது சூப்பர் எல்நினோவாக உருவெடுத்து உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளான. பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் விவசாயி வி.நந்தினியின் குரலும் அவற்றோடு இணைந்துள்ளது. பயனற்றது எனத் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகளில் கலைநயம் மிக்கக் கலைப்பொருள்களைச் செய்துவருகிறார் நந்தினி.

பொள்ளாச்சியை அடுத்த திவான்சாபுதூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வேளாண் கழிவான தேங்காய் ஓட்டில் தேநீர்க் கோப்பைகள், ஐஸ்கிரீம் கோப்பைகள், சோப் பெட்டிகள், அலங்காரக் கலைப்பொருள்கள், கிண்ணங்கள், மெழுகுவர்த்தித் தாங்கிகள் உள்ளிட்ட பல பொருள்களை இவர் தயாரித்து வருகிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in