

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, ஃபேஷன் - அரசியல் குறித்து எழுதிய ‘தி லுக்’ புத்தகம் அண்மையில் வெளியானது. அதன் வெளியீட்டு விழாவின்போது நடைபெற்ற நேர்காணலில் ஹாலிவுட் நடிகை டிரேசி எல்லிஸ், அமெரிக்காவில் பெண் அதிபருக்கான இடம் உருவாக்கப்பட்டிருக்கிறதா என மிஷெல்லிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த மிஷெல், “நடந்து முடிந்த தேர்தலே பெண் அதிபருக்கு நாம் இன்னும் தயாராகவில்லை என்பதைச் சொல்லிவிட்டது” என்றார்.
“அமெரிக்கர்களில் பலர் ஒரு பெண் தங்களை வழிநடத்துவதை விரும்பவில்லை. அமெரிக்கா வளர்வதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது” என்று சொன்ன மிஷெல் ஒபாமா 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ்ஸை ஆதரித்தார்.