நிலவை நோக்கிச் சென்ற முதல் பெண்! | வட்டத்துக்கு வெளியே

நிலவை நோக்கிச் சென்ற முதல் பெண்! | வட்டத்துக்கு வெளியே
Updated on
2 min read

பூமிக்கு வெளியே ஒரு வான்பொருளில் மனிதர்கள் கால்பதித்த சாதனை 1969இல் அமெரிக்கர்களால் நிகழ்த்தப்பட்டது. அதற்குப் பிறகு 1972ஆம் ஆண்டு வரை 5 விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, மொத்தம் 12 பேரை நிலவில் இறங்க வைத்த சாதனையையும் அமெரிக்கா படைத்தது. அதற்குப் பிறகு கடந்த 54 ஆண்டுகளில் அமெரிக்கர்கள் நிலவுக்குச் செல்லும் முயற்சி பூர்த்தியடையவில்லை.

முழுக்கப் பெண்களை மட்டுமே நிலவுக்கு அனுப்பும் ஆர்டெமிஸ் திட்டத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அறிவித்தது. 2022இல் ஆர்டெமிஸ் 1 ஆளில்லா விண்கலம் நிலவைச் சுற்றிவிட்டுத் திரும்பியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்டெமிஸ் 2 என்கிற விண்கலம் 4 மனிதர்களை ஏற்றிக்கொண்டு, 10 நாள்கள் பயணமாக நிலவை நோக்கிச் சென்றிருக்கிறது. இந்த விண்கலம் நிலவையும் பூமியையும் சுற்றி வந்து பல ஆய்வுகளை மேற்கொண்டுவிட்டு, பூமிக்குத் திரும்பிவிடும். இதில் பயணித்த நான்கு பேரில் ஒருவர் அமெரிக்காவின் கிறிஸ்டினா குக். இந்தப் பயணத்தின் மூலம் நிலவை நோக்கிச் சென்ற முதல் பெண் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார் கிறிஸ்டினா.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in