இந்திய அறிவியலாளரின் உலக சாதனை! | பெண்கள் 360

இந்திய அறிவியலாளரின் உலக சாதனை! | பெண்கள் 360
Updated on: 
1 min read

உலகத் தரவரிசையில் முதல் 2% அறிவியலாளர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார் சந்தியா ஷெனாய். இவர் கர்நாடக மாநிலம் மங்களூரு ஸ்ரீநிவாஸ் பல்கலைக்கழகத்தின் ‘பொருள் பண்பு அறிவியல் (மெட்டீரியல் சயின்ஸ்) - பொறியியல்’ துறை பேராசிரியராகவும் முதன்மை ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். கர்நாடகத்தில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை நிறைவுசெய்துள்ளார். மங்களூரு பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வெப்பம் சுற்றுச்சூழலுக்குப் பாதகத்தைத்தான் விளைவிக்கிறது. அந்த வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க ஏதுவான வெப்பமின் தயாரிப்புக் கருவிகளை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இவரது முயற்சி வெற்றிபெற்றால், அது சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக அமைவதோடு நீடித்த, நிலையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இந்தப் பணிகளுடன் வேதியியல், நானோ பொருள்கள் குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்.

இவரது தொடர் ஆராய்ச்சிப் பணிகளுக்காக இவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மதிப்புமிக்க முதல் 2% அறிவியலாளர்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 2025ஆம் ஆண்டு இடம்பிடித்துள்ளார். ஆராய்ச்சித் துறையில் இந்தியப் பெண் ஒருவர் தொடர்ந்து சிறப்பிடம் பெற்றுவருவது பெருமைக்குரியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in