புனிதமா, முரண்பாடா? | சேர்ந்தே சிந்திப்போம் 38

புனிதமா, முரண்பாடா? | சேர்ந்தே சிந்திப்போம் 38
Updated on
3 min read

நண்பர்களே மிகவும் சென்சிட்டிவ்வான விஷயத்தைப் பற்றித்தான் இந்த வாரம் சிந்திக்கப் போகிறோம். தாலி, இதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், இதன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் புனிதம் குறித்து நாம் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும். நம் பாட்டி காலத்தைப் போல அம்மாவின் காலம் இல்லை. அம்மாவின் காலத்தைப் போல் இன்று இல்லை. காலம் மிக வேகமாகவும் நாகரிகச் சிந்தனையோடும் எவ்வளவோ மாறிவிட்டது.

என் வெளிநாட்டு நண்பர் ஒருவர் வேலை விஷயமாக இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் நம் திரைப்படங்களுக்கும் கோயில்களுக்கும் செல்வார். நம் கலைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அது சிலருக்கு உறுத்தும், சிலரைக் காயப்படுத்தும். ஆனால், என்னைப் பொறுத்தவரை அது சிந்திக்கப்பட வேண்டிய ஒரு கேள்வி. “உங்கள் நாட்டில் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் பெண்கள் தாலியை வெளியே எடுத்து அதில் குங்குமம் வைப்பதைப் பார்த்திருக்கிறேன். திரைப்படங்களிலும் தாலிக்குக் குங்குமம் வைப்பது, கண்ணில் ஒற்றிக்கொள்வதை எல்லாம் பார்த்திருக்கிறேன்.

தாலியை ரொம்பப் புனிதமாகக் கருதுகிறீர்கள் இல்லையா?” என்று கேட்டார். “ஆமாம். தாலிக்குத் தெய்விகமும் புனிதத்தன்மையும் இருப்பதாக ஓர் ஆழ்ந்த நம்பிக்கையைச் சமுதாயத்தில் வழிவழியாகச் சொல்லி வந்திருப்பது உண்மைதான்” என்று நான் பதில் கூறியபோதுதான் திரும்பவும் என்னைச் சிந்திக்கவைத்த அந்தக் கேள்வியைக் கேட்டார். “இப்படிப் புனிதமாக மக்கள் கருதும் இந்தத் தாலி குறித்து உங்கள் சமூகத்திலேயே ஒரு முரண்பாடு இருக்கிறது” என்று அவர் சொன்னதும் தாலி குறித்து நமக்கு என்ன முரண்பாடு இருக்கப்போகிறது என்று நினைத்தேன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in