

பல ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டுப் பிறப்பையொட்டி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் உலக அளவிலும் இந்திய அளவிலும் பல முக்கிய ஜோதிடர்கள் கணித்திருந்தவற்றைத் தொகுத்து வெளியிட்டிருந்தார்கள். அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்த ஆண்டும் அதேபோல் ஒரு தாக்குதல் நடைபெறும் என்று சிலர் கணித்திருந்தனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை மிகப் பெரிய பஞ்சம் தலைவிரித்தாடும், மத்திய அரசு கவிழும், தங்கம் விலை அடிமட்டத்துக்குச் சரிந்துவிடும் என்றெல்லாம் கணித்திருந்தனர். ஆனால், அவற்றில் ஒன்றுகூடப் பலிக்கவில்லை. ‘இது போன்ற செய்திகளுக்கும் அவை பலிக்காமல் போவதற்கும் ஜோதிடமோ ஜோதிடர்களோ காரணமல்ல. அவற்றை அளவுக்கு மீறி நம்பும் மக்கள்தான் காரணம்’ என்று அந்த நாளிதழில் எழுதியிருந்தனர்.