

வாழ்க்கையில் பலருக்கும் மிக முக்கியமான உறவைப் பற்றி, பந்தத்தைப் பற்றித்தான் இந்த வாரம் யோசிக்கப்போகிறோம். ஒரு பெண் வளர்ந்து, படித்து, வேலைக்குச் செல்கிறாளோ இல்லையோ திருமணம் என்பது பலரது வாழ்க்கையிலும் நடக்கிற ஒரு விஷயம். திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அதெல்லாம் அந்தக் காலத்துக்குச் சரி, இந்தக் காலத்துக்குச் சரியில்லை என்று சிலர் சொல்லலாம்.
இன்னும் சிலர் இது இருவருக்கு நடுவில் மட்டும் இருக்கும் உறவாக அமையாமல், இரண்டு குடும்பங்களுக்கு இடையே உருவாகும் பிணைப்பு என்று சொல்கிறார்கள். நான் மறுக்கவில்லை. ஆனாலும், இதையெல்லாம் தாண்டி நாம் யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.