அந்த மூன்று காரணங்கள் | சேர்ந்தே சிந்திப்போம் 18

அந்த மூன்று காரணங்கள் | சேர்ந்தே சிந்திப்போம் 18
Updated on
3 min read

யார் தற்கொலை செய்துகொள்கிறார்கள், அதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்த்தோம். ஏற்கெனவே சொன்னதுபோல் 15 – 40 வயது வரை இருக்கிறவர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்கின்றன. தற்கொலைக்கு முக்கியக் காரணமான மனச்சோர்வு - மன அழுத்தத்துக்குப் பணக்காரர் - ஏழை, படித்தவர் - படிக்காதவர், சிறியோர் - முதியோர் என்கிற பாகுபாடே கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் மனச்சோர்வு - மன அழுத்தம் ஏற்படலாம்.

உலக சுகாதார நிறுவனம் தற்கொலை குறித்துப் பல நாடுகளிலும் ஆய்வுகள் நடத்தியிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரம் இது. ஆஸ்திரேலியாவில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறக்கிறபோது, 30 பேர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார்களாம். இந்தியாவில் இது 1:5 என்கிற விகிதத்தில் இருக்கிறது. அதாவது, ஆஸ்திரேலியாவில் தற்கொலைக்கு முயலும் 60 பேரில் 2 பேர் இறக்கையில் இந்தியாவிலோ தற்கொலைக்கு முயலும் ஐந்து பேரில் ஒருவர் இறக்கிறார். இது அதிர்ச்சி தரும் தகவல் அல்லவா. இது குறித்து நாம் ஒவ்வொருவரும் சமுதாயமும் அரசாங்கமும் தீவிரமாகச் சிந்தித்து ஆவண செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in