

இந்தியாவில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை, தமிழ்நாட்டின் முதல் திருநங்கை உதவிப் பேராசிரியர் என்கிற சிறப்புகளைப் பெற்றவர் சென்னை லயோலா கல்லூரியில் பணியாற்றிவரும் ஜென்சி. திருநர் சமூகத்துக்குக் கல்வியில் முன்மாதிரியாகத் திகழும் இவர், சென்னை வானொலி நிலையத்தில் ஆர் ஜேவாக இருந்திருக்கிறார்.
இரண்டாம் வகுப்பு படித்தபோது தன்னைத் திருநங்கையாக உணர்ந்துள்ளார். பேராசிரியர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் பத்தாம் வகுப்பில் தோன்றியிருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கில மொழித்தேர்வில் மட்டுமே குறைந்த மதிப்பெண் பெற்ற அவர், தான் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக வேண்டும் எனத் தீர்க்கமாக முடிவெடுத்தார்.