

திருநங்கைகளைப் பாலியல் தொழிலாளியாகவும் யாசகம் பெறுபவர்களாகவும் பார்க்கும் இந்தச் சமூகத்தின் பார்வையை மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் நாடகக்கலையைத் தேர்ந்தெடுத்தவர் ‘கலைச்சுடர்மணி’ ஐஸ்வர்யா.
வேலூர் மாவட்டம் கண்ணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்குப் பெற்றோர் வைத்த பெயர் அசோக். வறுமை நிறைந்த குடும்பச் சூழலில் அசோக்கின் அப்பா குடும்பத்தைப் பிரிந்து செல்ல, அம்மாவின் தோள்களில் குடும்பச் சுமை.