சமூக அழுத்தங்களுக்கு எதிரான குரல் | பெண் திரை

சமூக அழுத்தங்களுக்கு  எதிரான குரல் | பெண் திரை
Updated on: 
2 min read

அண்மையில் திரையரங்குகளிலும் அதைத் தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் பெற்று வருகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது திருமணம் முடிந்த மருது-முத்துவைச் சுற்றி நகரும் கதை என்று தோன்றலாம். ஆனால், அதைக் கடந்து எண்ணற்ற சமூகக் கருத்துகளை கதை முன்வைக்கிறது.

சாமியா, பூதமா? - திருமண நாளன்று இரவு தனது காதலனுடன் செல்ல நினைத்து வீட்டைவிட்டு முத்து வெளியேறுகிறார். காதலன் அவரை அழைத்துச் செல்லாததால், அவர் மீண்டும் வீடு திரும்பவேண்டிய நிலை ஏற்படுகிறது. திரும்பி வரும் முத்துவை அவருடைய தாய் அடிக்கிறார். இந்த வன்முறைக்கு எதிராக முத்து எந்த வசனமும் பேசவில்லை. அதற்கு மாறாக தனது இயலாமை, கோபம், வலி, விரக்தி என அனைத்தும் கலந்த நீண்ட அலறலாக வெளிப்படுத்துகிறார்.

அந்த ஊரின் பூசாரிகூட ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறார். முத்துவின் மேல் அந்த ஊரின் கிராம தேவதைதான் வந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் அது சாமியோ பூதமோ அல்ல. ஆண்டாண்டு காலமாகப் பெண்களின் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிராக எழும் குரல்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in