

என் மனைவி அரசுப் பணியில் இருப்பதால் அவர் வருவதற்கு மாலை ஏழு மணி ஆகிவிடும். வரும்போதே களைப்பாக இருப்பார். அவர் வருவதற்குள் துணிகளை வாஷிங்மிஷினில் போட்டுக் காயவைப்பேன். இரவுச் சிற்றுண்டிக்கு சட்னி, சாம்பார் வைத்துவிடுவேன். அவர் வந்த பிறகு இருவரும் சேர்ந்து உண்போம். இரவு நான்தான் அனைவருக்கும் கிரீன் டீ போட்டுக் கொடுப்பேன்.
அவர் அரசுப் பணிக்குப் படித்துக்கொண்டு இருந்தபோது இட்லி, தோசை மாவை அரைத்து வைத்துவிடுவேன். வீட்டு வேலைகளை நான் பகிர்ந்துகொள்ள, அவர் கடுமையாக உழைத்து ஒரே வருடத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார். எளிய உதவிகள்கூடப் பெண்களை எந்த அளவுக்கு உயர்த்துகின்றன பாருங்கள்! என் வீட்டில் அனைவருக்கும் பிடித்த இனிப்பின் செய்முறையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் வீட்டினருக்கு இனிப்பைச் செய்துகொடுங்கள், வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்!