பெண் இன்று
வீட்டு வேலை என்னும் பேரானந்தம்! | ஆண்கள் ஸ்பெஷல்
நான் ஒரு நடுத்தர வயதுத் தொழில் முனைவர். மனைவி, அம்மா, அப்பா, இரண்டு மகள்கள் அடங்கியது எனது குடும்பம். சமைக்கத் தெரியாமலே 2018 வரை வாழ்ந்துவிட்டேன். பாத்திரத்தில் உள்ளதைத் தட்டில் போட்டு உண்பது மட்டுமே எனது வேலையாக இருந்தது.
2018இல் என் அம்மா திடீரென இறந்துவிட்டார். 16 நாள்கள் வீட்டில் உறவினர்கள் இருந்ததால் சமையலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அதற்குப் பிறகு என் மனைவி ஒருநாள் காலை என்னிடம் காய்கறிகள் வெட்டித் தர முடியுமா எனக் கேட்டார். காலை 7.30 மணிக்கு மகள்களுக்குப் பள்ளி வாகனம் வந்துவிடும் என்றும் சொன்னார். நான் கேள்வியாக நோக்க அவரோ, “உங்கள் அம்மாதான் இந்த வேலையைச் செய்தார்கள். அது எனக்குப் பேருதவியாக இருந்தது” என்றார்.
