அம்மாவின் சமையலறையில் எனக்கும் ஓர் இடம்! | ஆண்கள் ஸ்பெஷல்

அம்மாவின் சமையலறையில் எனக்கும் ஓர் இடம்! | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on: 
2 min read

சமையலறைக்குள் ஆண்கள் செல்வது ஏதோ பெரிய விஷயம் போலப் பார்க்கப்பட்ட காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும், பல வீடுகளில் சமையல் என்பது பெண்களின் பொறுப்பாக மட்டுமே இன்னும் தொடர்கிறது. என்னைப் பொறுத்தவரை சமையலறை என்பது அந்த வீட்டில் வாழும் அனைவருக்குமான இடம்!

எனக்கு 32 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. அதனால், மனைவிக்குச் சமையலில் உதவுவது பற்றிய அனுபவங்களை என்னால் பகிர்ந்துகொள்ள முடியாது. ஆனால், என் அம்மாவுக்குச் சமையலறையில் அவ்வப்போது உதவுவது உண்டு.

நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் எப்போது சப்பாத்தி அல்லது பூரி செய்கிறார்களோ, அப்போதெல்லாம் அம்மாவுக்கு மாவு தேய்த்துக் கொடுப்பது என் வேலை. அதை ஒரு வேலையாகவோ பொறுப்பாகவோ நினைத்ததில்லை. அம்மாவுக்கு உதவுகிறோம் என்கிற எண்ணத்தில்தான் செய்தேன். அந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

அண்மையில் அம்மாவுக்குக் கையில் நரம்பு தொடர்பான சிறிய அறுவைசிகிச்சை நடைபெற்றது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு சுமார் பத்து நாள்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டியிருந்தது. அவரால் சமையலறை வேலைகளைச் செய்ய முடியவில்லை. அப்போதுதான் அம்மாவுக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் வலுவானது. அதற்குப் பிறகு, எப்போது நேரம் கிடைக்கிறதோ, எப்போதெல்லாம் அம்மாவுக்கு உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் என்னால் முடிந்த சமையல் வேலைகளைச் செய்து கொடுக்கத் தொடங்கினேன். காய்கறிகளை நறுக்கிக் கொடுப்பது, தேவையான பொருள்களை எடுத்துக் கொடுப்பது, மாவு பிசைவது எனச் சிறிய வேலைகளில் உதவுவேன்.

Loading content, please wait...

X