ரசத்தில் தொடங்கியது விருந்தாகத் தொடர்கிறது! | ஆண்கள் ஸ்பெஷல்

ரசத்தில் தொடங்கியது விருந்தாகத் தொடர்கிறது! | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on: 
1 min read

என் வாழ்க்கைப் பயணம் பல மாற்றங்களைக் கொண்டது. வேலை நிமித்தமாக வீட்டைவிட்டு வெளியேறி, தனியாகத் தங்க நேர்ந்தபோதுதான் சமையலின் அவசியம் புரிந்தது. தொடக்கத்தில் பாத்திரங்களை எப்படிக் கையாள்வது, அஞ்சறைப் பெட்டி மசாலாக்களை எப்படிப் பயன்படுத்துவது என்று எதுவுமே தெரியாது.

உணவக உணவையே நம்பியிருந்த எனக்கு, உடலளவில் சோர்வும் செரிமானப் பிரச்சினைகளும் நாள்பட ஏற்படத் தொடங்கின. அப்போதுதான் நம் உடலுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நாமே சமைத்து உண்பதே சிறந்தது என்கிற எண்ணம் உதித்தது.

சமைப்பது என முடிவானதுமே அம்மாவிடம் தொலை பேசியில் கேட்டு, மிகவும் எளிய உணவான பூண்டு, தக்காளி ரசம் செய்யக் கற்றுக்கொண்டேன்.

Loading content, please wait...

X