பணம் குறைவு, மனம் நிறைவு | ஆண்கள் ஸ்பெஷல்

பணம் குறைவு, மனம் நிறைவு | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on: 
1 min read

நானும் என் மனைவியும் அரசுப் பணித் தேர்வுக்குப் படிப்பவர்கள். என் வேலை முடிந்ததும் மீதமுள்ள வீட்டு வேலைகளை நாங்கள் இருவரும் சேர்ந்து செய்வோம். தினமும் சேர்ந்து படிப்போம். வாரம் ஒரு நாள் விடுமுறை. கோயில், கண்காட்சி என்று ஏதேனும் ஒன்றுக்குச் சேர்ந்து செல்வோம். சமையலறையில் செலவிடும் நேரம் நல்வாழ்வுக்குச் செலவிடும் நேரம் என்பதால் நாங்கள் படித்தவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டே சமைப்போம். இதனால் வேலை, கல்வி என இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறும்.

எனக்கு நடுத்தர வருமானம்தான். அந்த வருவாய்க்கு ஏற்றவாறு செலவைப் பார்த்துக்கொள்கிறார் மனைவி. அதனால், தேவையில்லாத பிரச்சினைகள் எட்டிப் பார்க்க வாய்ப்பில்லை. நிறைவான வாழ்க்கை வாழ நிறைவான வருமானம் வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது. அது தவறு என்பதைக் காலப்போக்கில் உணர முடிந்தது.

வீட்டில் சமையல், இதர வேலைகளை நாங்கள் இருவரும் சேர்ந்து செய்வதால் எங்களுக்கிடையே புரிதல் அதிகரித்திருக்கிறது. அன்பைச் சமைத்து, பாசத்தைப் பரிமாறி இல்வாழ்க்கை இனிதே செல்கிறது. வருமானம் குறைவுதான். ஆனால் புரிதல் உள்ள வாழ்க்கை என்றும் நிறைவுதானே. - ஆ. நாராயணன், சங்கரன்கோவில்.

பணம் குறைவு, மனம் நிறைவு | ஆண்கள் ஸ்பெஷல்
பெண்ணின் கனவைவிட நகை பெரிதா? | என் பாதையில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in