

அன்று இரவுதான் என் அத்தை சொந்த ஊரில் தாத்தா, ஆயாவைப் பார்த்துவிட்டு வந்தார். வீட்டினுள் நுழைந்ததுமே, “என்ன நீ மாப்பிள்ளையைச் சமைக்க வைத்தாயா?” என என் துணைவியிடம் கேட்டார். நானும் என் துணைவியும் சேர்ந்துதான் அத்தை இல்லாத மூன்று நாள்களாகச் சமைத்தோம்.
ஆனால், அன்று காலை துணைவிக்குச் சற்று முன் நான் எழுந்து காய்கறிகளை வெட்டியதை மாமா பார்த்ததை வைத்துத்தான், அத்தை அப்படிக் கேட்டார் எனப் புரிந்தது. அலுவலகத்துக்குச் செல்வதோடு சமையலையும் நான் கவனிப்பதில் அத்தைக்கு வருத்தம். ஆனால், அலுவலகத்துக்குச் செல்லும் என் துணைவி சமைப்பது அவரது கடமையாக மட்டுமே பார்க்கப்படுவதுதான் வேடிக்கை.