

நான் சிங்கப்பூரில் 15 ஆண்டுகள் இருந்ததால் சோறு வடிக்கவும் சிறப்பாக டீ போடவும் கற்றுக்கொண்டேன். 20 பேர் வேலை செய்த எங்களது நிறுவனத்தில் காலை, மாலை டீ போடும் பொறுப்பு எனக்குத்தான். கரோனாவின்போது ஊருக்குத் திரும்பிய நான் மீண்டும் சிங்கப்பூர் செல்ல இயலவில்லை. அதனால், கிராமத்தில் விவசாயத்தைப் பார்த்துக்கொண்டு இங்கேயே இருந்துவிட்டேன். வீட்டிலும் டீ, காபி போடுவது என் பிரிவு. டீ கடைகளுக்குச் செல்லும்போது அவர்கள் என்ன டீத்தூள் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்து, தரமாக இருந்தால் அதைப் பரீட்சித்துப் பார்ப்பதும் உண்டு. வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலும் வயலில் ஆள்கள் வேலை செய்தாலும் டீ போடுவது நான்தான்.