அப்பாவின் புதிய பயணம் | ஆண்கள் ஸ்பெஷல்

அப்பாவின் புதிய பயணம் | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on
1 min read

நான் சமையலைப் பற்றிச் சொல்லப்போவதில்லை. ஆனால், ஒவ்வோர் அப்பாவும் கற்றுக்கொள்ள வேண்டிய பழக்கம். இந்த ஆண்டு எங்களுக்கு மறக்க முடியாததாக மாறியது. பிப்ரவரி 21 அன்று எங்கள் செல்ல மகள் பிறந்தாள். அந்த நிமிடத்தில் இருந்து எங்கள் வாழ்க்கை முழுமையாக மாறியது. தூக்கமில்லா இரவுகள், சீர்குலைந்த அட்டவணைகள், புதிதாகப் பிறந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு.

தொடக்கத்தில் குழப்பமாக இருந்தது. மெதுவாகக் கற்றுக்கொண்டோம். நானும் என் மனைவியும் இரவு நேரத்தில் குழந்தையைக் கவனித்தோம். மாறி, மாறி உணவளித்துத் தூங்க வைக்க முயன்று, அவளை அமைதிப்படுத்தினோம். தொடக்கத்தில் குழப்பமாக இருந்தவை பிறகு அன்பும் பொறுமையும் நிறைந்த வேலைகளாக அவை மாறின.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in