

நான் தனியார் துறையில் உயர்பதவி வகித்து ஓய்வு பெற்றவன். வேலைக்குச் சென்ற காலக்கட்டத்தில் சமையலறை என்பது பெண்களுக்கான இடமாகத்தான் எனக்குத் தோன்றியிருக்கிறது. முதலில் அம்மா, பின் மனைவியின் இருப்பிடமாகவே சமையலறை இருந்தது. சிறு வயதிலிருந்தே அதிகாலையில் எழுந்து பழக்கப்பட்டவன் நான்.
ஓய்வுபெற்ற பின்னும் அது தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் ஆர்வத்தோடு எதிர்நோக்கும் செய்தித்தாள் வரச் சிறிது தாமதமாகும். நடைப்பயிற்சியும் பிறகுதான். காலையில் எழுந்து என்ன செய்ய? முதற்கட்டமாகச் சமையலறை தரையைச் சுத்தம் செய்து ஃபில்டர் காபி போட ஆரம்பித்தேன். கழுவிய பாத்திரங்கள் மேடையில் இருந்தால் எடுத்து அடுக்கினேன். என் மனைவிக்கு எனக்குப் பின் தூங்கி, எனக்குப் பின் எழும் பழக்கம்! அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.